இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்பான பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இன்று(ஏப்.27) விசாரணைக்கு வந்த வழக்கை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா பதிலளிக்கையில், மத்திய அரசு நிர்வாக ரீதியாக அனைத்து துறையையும் முடுக்கிவிட்டு வேலைசெய்துவருகிறது. அதன் விவரங்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் பிரமதருக்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கப்படுகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்றங்கள் கோவிட்-19 தொடர்பான விசாரணை, உத்தரவுகள் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. அவர்களுக்கு கள நிலவரம் சிறப்பாக தெரிந்துகொள்ளும் சூழல் உள்ளது.
அதேவேளை, மாநில அரசுகள் தங்கள் சுகாதார கட்டமைப்பு குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு(ஏப்.30) ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பாஜகவைச் சேர்ந்த மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு கோவிட்-19!