ETV Bharat / bharat

Sankaradas Swamigal: நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 99ஆம் ஆண்டு நினைவு நாள்

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில், அவரது 99ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (நவம்பர் 13) அனுசரிக்கப்பட்டது. இதில் ஏராளமான கலைஞர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்
ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்
author img

By

Published : Nov 14, 2021, 8:39 AM IST

தமிழ் நாடக வரலாற்றுக்குப் புத்துயிர் தந்த சங்கரதாஸ் சுவாமிகள், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தலைமையர்களாக விளங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடக தலைமையாசிரியரான இவர் நாடகத் தந்தை என்று கலைஞர்களால் அழைக்கப்படுபவர்.

ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் 99ஆம் ஆண்டு நினைவஞ்சலியை ஒட்டி நாட்டுப்புற கலைஞர்களின் மான் ஆட்டம், மயில் ஆட்டத்துடன், தெருக்கூத்து, நடன நிகழ்ச்சிகளின் ஊர்வலம் நடைபெற்றது.

ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்
ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்
புதுச்சேரி நாடகக் கலைஞர்கள் பொதுநல கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் 99ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளின் உருவப்பட ஊர்வலம் முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகிலிருந்து புறப்பட்டது.
காந்தி வீதி வழியாகச் சென்ற பேரணியில் நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்களின் மான் ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், புலி ஆட்டம், பம்பை உடுக்கை உள்ளிட்ட நடனங்களுடன் தெருக்கூத்து கலைஞர்களின் தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்
ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாடக கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள், நாடக நடிகர்கள், திரைப்படத் துறை முன்னணி பிரமுகர்கள், பின்னணி பாடகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கருவடிக்குப்பம் சுடுகாட்டில் முடிவடைந்த பேரணியைத் தொடர்ந்து ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் புதுச்சேரி நாடக கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், பறை இசைக் கலைஞர்கள், பாரம்பரிய கலைக் குழுக்கள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டு சங்கரதாஸ் சுவாமி நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.