சிவசேனா செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறித்து முக்கிய கருத்தை வெளியிட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தற்போதைய தலைவர் சோனியா காந்தி தனது கடமையை சிறப்பாக செய்கிறார். இருப்பினும் அவர் உடல் நலிவுற்றதால், உறுதியாக செயல்படவில்லை. எனவே, ஐ.மு கூட்டணியின் தலைவராக சரத் பவார் வர வேண்டும்.
இது கூட்டணிக்கு மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சிக்கும் பலம் சேர்க்கும். பாஜகவை எதிர்கொள்ள ஐ.மு கூட்டணி பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். இதற்கு வலிமையான தலைவர் அவசியம் என்றார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகதி கூட்டணிய ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு சரத் பவார் திடீர் சம்மன்