ஜார்க்கண்ட்: சாஹிப்கஞ்ச் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் ப்ரோமேக்ஸ் ஐபோன் திருடுபோய் உள்ளதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் கொள்ளையடித்த நபரைத் தேடி வந்துள்ளனர்.
அந்த ஐபோனில் வைரம் பதிக்கப்பட்டுள்ளதாகவும், விலை 4 லட்சம் ரூபாய் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், சாஹிப்கஞ்ச், தீன் பஹார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஐபோனைக் காட்டியவாறு தனது நண்பர்களுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையறிந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், அது திருடு போன வைரம் பதித்த ஐபோன் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட்டின் தீன் பஹார் பகுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த செல்போன் திருடர்கள், தாங்கள் திருடிய செல்போன்களை இங்கு கொண்டு வந்த விற்பனை செய்கின்றனர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மையில், சாஹிப்கஞ்ச்யில் உள்ள பியார்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெவ்வேறு பிராண்டுகளின் 90 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: நாட்டில் புதிதாக 2,58,089 பேருக்கு கரோனா