ETV Bharat / bharat

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி - Sabarimala Temple

ஆடி பிறப்பை முன்னிட்டு சபரிமலை கோயில் இன்று (ஜூலை 16) மாலை திறக்கப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) முதல் 5 நாள்களுக்கு தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Sabarimala Temple to open from today
Sabarimala Temple to open from today
author img

By

Published : Jul 16, 2021, 10:53 AM IST

Updated : Jul 16, 2021, 3:17 PM IST

பத்தனம்திட்டா: சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இந்நிலையில், “பக்தர்கள் ஆரோக்கியமான யாத்திரையை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலையில் பக்தர்கள் 5 நாள்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவிட் நடைமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில், பக்தர்களுக்கு சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை,

  1. கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி நாளொன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  2. யாத்ரீகர்கள் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி-பி.சி.ஆர். சோதனை சான்றிதழை எடுத்து வர வேண்டும்.
  3. கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் யாத்திரையைத் தவிர்க்க வேண்டும்.
  4. முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  5. கூட்டம் அதிகமாக இருக்கும் உணவகங்கள், கடைகள், வரிசைக்கு வராமல் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  6. கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம்செய்ய வேண்டும்.
  7. கரோனா அறிகுறிகள் தென்பட்டால் நிலக்கல், பம்பா, சன்னிதானத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும்.
  8. நிலக்கல், பம்பா, சன்னிதானம் மருத்துவமனைகளில் தலா இரண்டு மருத்துவர்கள், செவிலியர், உதவியாளர்கள், மருந்தாளுநர், ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியில் இருப்பார்கள்.
  9. பம்பாவில் வென்டிலேட்டர் வசதி உள்ளது. அவசரநிலைகளைச் சமாளிக்க பம்பா, சன்னிதானத்தில் ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படுகின்றன.
  10. யாத்ரீகர்களுக்கு பம்பாவிலிருந்து பாட்டில் குடிநீர் வழங்கப்படும். இரண்டு இடங்களில் தண்ணீர் நிரப்ப வசதிகள் செய்யப்படும். 40 இடங்களில் கை கழுவ சானிடைசர் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆடிப் பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் இன்று நடை திறக்கப்படும். நாளை (ஜூலை 17) முதல் 5 நாள்களுக்கு, அதாவது 21ஆம் தேதிவரை கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலுக்குள் சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்க முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : நேரலை: சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி தரிசனம்

Last Updated : Jul 16, 2021, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.