ETV Bharat / bharat

10 மி.லி. மதுவுடன் கோயிலுக்குள் நுழைந்த ரஷ்ய புத்த துறவி கைது!

பீகாரில் 10 மில்லி மதுபானத்துடன் மகாபோதி கோயிலுக்குள் நுழைந்த ரஷ்ய புத்த துறவியை போலீசார் கைது செய்தனர்.

russian
russian
author img

By

Published : Jan 20, 2023, 8:20 PM IST

கயா: பீகார் மாநிலம், புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த புத்த துறவியான இடிப்சி அயாஸ் என்பவர் சென்றுள்ளார். அப்போது கோயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அதில், அவரிடம் 10 மில்லி லிட்டர் மதுபானம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பீகார் மாநிலத்தில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், விதிகளை மீறி கோயிலுக்கு மதுவுடன் சென்ற புத்த துறவி இடிப்சி அயாஸை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த மதுவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அதில், தாந்திரீகம் செய்வதற்காக அந்த 10 மில்லி மதுவை கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது. தாரா தேவியின் சிறப்பு வழிபாட்டில் இதை பயன்படுத்த இருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து புத்த துறவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் : ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.