ஹைதராபாத்: இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவின் இரண்டாயிரத்து 783 கேலோ விளையாட்டு வீரர்களுக்காக ரூ. 5.78 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் ரூ. 10,393.46 கிடைக்கும் என இந்திய விளையாட்டு அமைப்பு(Sports Authority of India) தெரிவித்துள்ளது.
ஒரு தடகள வீரருக்கு ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் நேரடியாக, அவரது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. மீதமுள்ள தொகை அவர்களின் பயிற்சி, உணவு, உறைவிடம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்காக செலவிடப்படுகிறது.
சொந்த ஊருக்குப் பயணம் செய்வதற்கான செலவுகள், வீட்டில் இருக்கும்போதும் அவர்களுக்கான உணவுக் கட்டணங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் செய்யும் பிற செலவுகள் ஆகியவையும் இதில் அடங்கும். கேலோ இந்தியா திறமை மேம்பாடு (கேஐடிடி) திட்டத்தின்படி இந்த நிதி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 24 விளையாட்டுப் பிரிவுகளில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுதேச விளையாட்டு மேம்பாட்டிற்கான கேலோ இந்தியா உதவித்தொகையின் ஒரு பகுதியாக 227 கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு மொத்தம் ரூ. 45,40,000 வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தியவர் ஜெயலலிதா' - அமைச்சர் பெஞ்சமின்