ETV Bharat / bharat

மக்களவைத் தேர்தலில் களமிறங்குகிறாரா பிரியங்கா காந்தியின் கணவர்? - இடிவி பாரத்திற்கு பிரத்தியேகப் பேட்டி - ராபர்ட் வதேரா பிரத்தியேகப் பேட்டி

தேர்தல் அரசியலில் களமிறங்குவது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இடிவி பாரத்திற்கு பிரத்தியேகப் பேட்டி அளித்துள்ளார்.

ROBERT VADRA
ROBERT VADRA
author img

By

Published : Mar 9, 2022, 9:29 AM IST

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இடிவி பாரத்திற்கு பிரத்தியகப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் அரசியலில் களமிறங்கும் யோசனையில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

வதேரா தனது பேட்டியில் கூறியதாவது, " அரசியலில் களமிறங்குவது தொடர்பாக எனது குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவை தெரிவிப்பேன். காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் அரசியலுக்கு வர என்னை அழைத்துள்ளனர். ஆனால் எனது கவனம் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே உள்ளது. தேர்தலில் போட்டியிடும் சூழல் ஏற்பட்டால் மொராதாபாத் தொகுதியிலிருந்து களமிறங்குவேன். எனது மூதாதையர்கள் காலத்திலிருந்து நாங்கள் அங்கு வாழ்கிறோம். பல சமூகப் பணிகளை அங்கு நான் மேற்கொண்டுள்ளேன்.

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக மட்டுமல்லாது, ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் எனக்கு எதிராக போலி புகார்கள் பரப்பிவருகின்றன. மேலும் அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி என்னை அச்சமடைய வைக்கும் நோக்கில் அவர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு அரசியல் ரீதியாக சிக்கல் நேரும் போது என்னை குறிவைத்து அவதூறு பரப்பி தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

நான் காந்தி குடும்பத்துடன் தொடர்புடையவன் என்பதால்தான் இத்தனை சோதனைகளும் ஏற்படுகிறது. நான் தொழிலதிபர் என்பதால் எனது நற்பெயரை களங்கப்படுத்துவதையே குறியாகக் கொண்டுள்ளனர். எனவே இதை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு வருகிறேன். இருப்பினும் அரசியல் பின்னணி சார்ந்து குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் இவர்களை நாடாளுமன்றத்திலும் எதிர்கொள்ளலாம் என சிந்தித்துவருகிறேன்.

ராபர்ட் வதேரா பிரத்தியேகப் பேட்டி

அந்த தளத்தில் எனது நியத்தை எடுத்துப் பேசி அவர்களை நேரடியாக எதிர்கொள்ள முடியும்" என்றார். நாட்டில் பெண்களின் அரசியில் பிரதிநிதித்துவம் தேவையை அறிந்து தனது மனைவி பிரியங்கா காந்தி செயல்படுவதாகக் கூறிய அவர், இது நாட்டின் போக்கையே மாற்றி அமைக்கும் என்றார். மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசுதான் பொறுப்பு எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: குறைந்தது கோவிட் - சர்வதேச பயணிகள் விமான சேவை மீண்டும் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.