ஐந்து மாநில தேர்தல் முடிவிற்கு பிறகு, நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்த மே மாதத்தில் மட்டும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் 59 காசுகளும், டீசல் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் 13 காசுகளும் உயர்ந்துள்ளது. இதில் சில நகரங்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.
வழக்கம்போல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதால்தான் இந்த விலையேற்றம் என ஒன்றிய அரசு தெரிவித்தாலும், இந்தியாவில் தேர்தல் நடக்கும் சமயங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படுவதில்லை என்பது வியப்பளிக்கிறது.
விலை ஏற்றத்துக்கு யார் பொறுப்பு?
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை என்பது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொருத்தே, நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலையில் 60 சதவிதமும், டீசல் விலையில் 54 சதவிதமும் ஒன்றிய, மாநில அரசுகள் கலால் வரி விதித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் என்பது ஒன்றிய, மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், பெட்ரோலிய பொருட்களின் வருவாய் என்பது ஏறாத்தாழ 556 சதவீகிதம் வரை உயர்ந்துள்ளது.
மேலும், ரங்கராஜன் கமிட்டி பெட்ரோல் விலையில் கலால் வரியாக 56 சதவிதமாகவும், டீசலுக்கு 36 சதவிதமாகவும் குறைக்க வேண்டும் என பரிந்துரைந்துள்ளதாக மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஈவு இரக்கமின்றி நாயை கொலை செய்த நபர்' - வைரல் வீடியோ