புது டெல்லி : மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை (ஏப்.20) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “5 மாநிலங்களுக்கு கோவிட் எச்சரிக்கை” விடுத்துள்ளது.
அந்த மாநிலங்கள் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் மிசோரம் ஆகியவை ஆகும். இந்த மாநிலங்களில் கோவிட் பாதிப்புகள் திடீரென அதிகரிக்கின்றன. மகாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) 693 பேர் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டனர்.
அன்றைய தினம், உத்தரப் பிரதேசத்தில் 217 பாதிப்புகள் கண்டறியப்பட்டிருந்தன. டெல்லியில் உச்சப் பட்சமாக 998 பாதிப்புகள் ஏற்பட்டன. ஹரியானா மற்றும் மிசோரத்திலும் வார பாதிப்புகள் தொடர் அதிகரிப்பில் உள்ளன.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர். ராமன் கங்காகேத்கர், “நாட்டில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும், “உலக நாடுகளில் ஓமைக்ரானின் பிஏ.2 உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது” என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதையும் படிங்க : 'தொழில் முனைவோர் கோவிட் உதவி மற்றும் நிவாரணத் திட்டம்' - அமைச்சர் அறிவித்த திட்டம் கூறுவது என்ன?