ETV Bharat / bharat

இஸ்ரோவின் பத்தாண்டு திட்டம்! - இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ தனது பத்தாண்டு திட்டமாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள், பிராட்பேண்டிற்கான செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

sivan
sivan
author img

By

Published : Jan 2, 2021, 1:24 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது பத்தாண்டு திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் கனரக லிப்ட் ராக்கெட், மீண்டும் பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம், அரை கிரையோஜெனிக் இயந்திரம் மற்றும் பல தொழில்நுட்பம் சார்ந்தவை உள்ளடங்கியுள்ளன.

அதனடிப்படையில், ககன்யான் திட்டத்தின் கீழ் ஆளில்லா முதல் விமானம் என்பது இந்தாண்டு நாம் அடைய வேண்டிய மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரோவின் அனைத்து மையங்களும், பத்தாண்டுத் திட்டத்தை வகுப்பதில் தீவிரமாக பங்களித்துள்ளதாகவும் தனது புத்தாண்டு செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பத்தாண்டுகளில் பிராட்பேண்ட் தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோள், மின்சார செயற்கைக்கோள் தளம் மற்றும் அனைத்து பயன்பாட்டு பகுதிகளிலும், உயர் செயல் திறன் கொண்ட செயற்கைக்கோள் தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சிவன் கூறியுள்ளார்.

இஸ்ரோவின் தொழில்நுட்ப வளர்ச்சி பங்களிப்பு என்பது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை எளிதாக்குவதற்கும், மனித விண்வெளிப் பயண நடவடிக்கைகளை நீண்ட காலத்திற்குத் தக்கவைப்பதற்கும் தேவைப்படும் என சிவன் கூறியுள்ளார்.

அதன் பங்கில், மனித விண்வெளி விமான மையம் மற்ற அனைத்து இஸ்ரோ மையங்களுடன் இணைந்து, ஏவுதள வாகனம், சுற்றுப்பாதை தொகுதி உள்ளிட்ட மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்குத் தேவையான மேம்பட்ட திறன்களை நோக்கி செயல்படுவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாகாலாந்து பள்ளத்தாக்கில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.