பாட்னா: பிகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் வசித்துவந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் தம்பதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பம் நேற்றிரவு (ஜனவரி 30) நடந்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து உடல்களை மீட்டனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், மகேந்திர சிங் அவரது மனைவி புஷ்பா சிங் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருக்கும்போது கொலை நடந்துள்ளது.
பாட்னாவில் இருந்து தடய அறிவியல் ஆய்வகக் குழு வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிப்பட்டுள்ளன. இருவரது உடல் காயங்களை வைத்து பார்க்கும்போது அவர்கள் தாக்குதலில் இருந்து தப்ப முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. பேராசிரியர் மகேந்திர சிங் (70) வீர் குன்வர் சிங் பல்கலைக்கழகத்தின் டீனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி புஷ்பா சிங் (65) அர்ராஸ் மகிளா கல்லூரியில் உளவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். குறிப்பாக மகேந்திர சிங், 1980ஆம் ஆண்டு பாஜகவின் யுவ மோர்ச்சாவின் மாநிலத் தலைவராக இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மந்திரவாதி போக்சோ வழக்கில் கைது