ETV Bharat / bharat

பணமோசடி: ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு! - latest tamil news

பணமோசடி வழக்கில் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகை நோரா ஃபதேஹி, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு

author img

By

Published : Dec 12, 2022, 10:47 PM IST

டெல்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சூழலில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நோரா ஃபதேஹி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “ ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷ் சந்திரசேகர் ரூ. 200 கோடி பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்.

இந்நிலையில் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பெர்னாண்டஸ் என் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். பாலிவுட்டில் எனக்கு சக நடிகையான ஜாக்குலின் நியாயமாக தன்னுடன் போட்டியிட முடியாத நிலையில், இப்படியான வேலைகளில் இறங்கியுள்ளார்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி, சுகேஷ் சந்திரசேகரின் ரூ.200 கோடி பணமோசடி வழக்கு தொடர்பாக நோரா ஃபதேஹியிடம் அமலாக்கத்துறை(ED) விசாரணை நடத்தியது, அப்போது விசாரணை முடிந்த வந்த பிறகு தன் மீதான குற்றச்சாட்டுகளை நடிகை நோரா ஃபதேஹி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதான பண மோசடி வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.