புதுச்சேரி: நாட்டின் குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை மறுதினம் (ஜன.26) கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் துணை நிலை ஆளுநர் கொடியேற்றி வைக்கவுள்ளார். இவ்விழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி இன்று(ஜன.24) காலை 9 மணிக்கு மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில், அலுவலர்கள் தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்பு, காவல் துறை, கப்பற்படை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளின் அணிவகுப்பு, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை அந்நாளில் நடைபெறும். இதன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று(ஜன.24) நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மைதானம் முழுவதும் சிறப்பாக செய்தனர். கடற்கரை சாலையில் விழா நடைபெறுவதால் கடற்கரை காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சி மன்றங்களுக்கே ஆளும் அதிகாரம் வேண்டும் - தியாகி லட்சுமிகாந்தன் பாரதி