புதுச்சேரி: மிஷின் வீதியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கண்ட வ.உ.சி பள்ளி, கலவை கல்லூரி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக கட்டடங்களில் சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டு வருவதால் அப்பள்ளி மாணவர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பல்வேறு தரப்பினர் பள்ளிகளை பழமை மாறாமல் புதுப்பிக்கக் கோரி அரசுக்கு கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
தற்போது புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் பள்ளிகளை சீரமைக்க 2கோடியே 81லட்சத்து 22ஆயிரத்து 462 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பூமி பூஜை
இப்பணிகளை வரும் 2023ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று (செப்.01) முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமண நாராயணன் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு