ETV Bharat / bharat

விருது பெயர் மாற்றியதைப் போல ஸ்டேடியம் பெயரையும் மாத்துங்க: ட்விட்டரில் அதகளம் - அருண் ஜெட்லி ஸ்டேடியம்

நாட்டின் உயரிய விளையாட்டு விருதின் பெயரை பிரதமர் மோடி மாற்றியிருப்பதைப் போலவே, மோடி ஸ்டேடியம், அருண் ஜெட்லி ஸ்டேடியம் என இருப்பதையும் மாற்ற வேண்டும் என ட்விட்டரில் எதிர்க்கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.

மோடி ஸ்டேடியத்தின் பெயரை மாத்துங்க
Rename Modi stadiums
author img

By

Published : Aug 7, 2021, 12:49 PM IST

டெல்லி: இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான் சந்த் பெயரில் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விளையாட்டு விருதின் பெயரிலிருந்து முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரை நீக்கியதைப்போல தன் பெயரிலும், அருண் ஜெட்லியின் பெயரிலும் உள்ள ஸ்டேடியங்களின் பெயரையும் பிரதமர் மோடி மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஸ்டேடியம் பெயரையும் மாத்துங்க!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தபோது புதுப்பிக்கப்பட்ட பெரோஸ் ஷா கோட்லா விளையாட்டு அரங்கம், அவரது மறைவுக்குப் பின்னர் அருண் ஜெட்லி அரங்கமாக மாற்றப்பட்டது.

உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கமான அகமதாபாத்தில் உள்ள மொடேரா ஸ்டேடியம், நரேந்திர மோடி விளையாட்டரங்கம் என 2020ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ராஜிவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டுவந்த கேல் ரத்னா விருதின் பெயர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இரு விளையாட்டரங்கங்களின் பெயரையும் மாற்ற எதிர்க்கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - விளையாட்டு வீரர்கள் வரவேற்பு

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "மேஜர் தயான் சந்த் பெயரில் விருதுகள் வழங்கப்படுவதை வரவேற்கிறோம்.

  • मोदी जी हमें उम्मीद है आप देश के खिलाड़ियों के नाम पर और स्टेडियम के नाम,अन्य स्कीम का नाम भी रखेंगे

    अब शुरुआत हो ही गई है, तो अच्छी शुरुआत करे।
    सबसे पहले नरेन्द्र मोदी स्टेडियम व अरुण जेटली स्टेडियम के नाम बदल मिल्खा सिंह स्टेडियम रख दीजिए!

    पूरा देश आपके इस फैसले से सहमत होगा! pic.twitter.com/8bRjP6IdBh

    — Randeep Singh Surjewala (@rssurjewala) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ட்விட்டரில் அதகளம்

ஆனால் விளையாட்டு விருதின் பெயரிலிருந்து முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரை நீக்கியதைப்போல தன் பெயரிலும், அருண் ஜெட்லியின் பெயரிலும் உள்ள கிரிக்கெட் மைதானங்களின் பெயரை மாற்றி கபில் தேவ் மைதானம், சச்சின் டெண்டுல்கர் மைதானம் எனப் பிரதமர் மோடி புதிய பெயரை வைப்பார் என நம்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா தனது ட்விட்டர் பதிவில், ’’ராஜிவ் காந்தி பெயரிலான விருதிற்குப் பெயர் மாற்றம் செய்ததைப் போலவே, நரேந்திர மோடி விளையாட்டரங்கத்திற்கு மீண்டும் சர்தார் பட்டேல் விளையாட்டரங்கம் எனப் பெயரிட வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • As @narendramodi Govt renamed Rajiv Gandhi Khel Ratna Award to Major Dhyan Chand Khel Ratna Award, I would like to request them to rename Narendra Modi Stadium to Sardar Patel Stadium again. pic.twitter.com/w1ccKacK4b

    — Shankersinh Vaghela (@ShankersinhBapu) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் இர்பான் பதான், ’’இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. விளையாட்டு வீரருக்கான அங்கீகாரமும்கூட. விளையாட்டில் பல விஷயங்களுக்கு இது தொடக்கமாக இருக்கும். எதிர்காலத்தில் விளையாட்டு அரங்கங்களும் விளையாட்டு வீரர்களின் பெயரில் வரும் என நம்புகிறேன்’’ என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • Absolutely welcome this move. Sportsman getting recognition and award being named after him or her. Hopefully start of many such things in sports #DhyanChandAward #dhyanchand ji

    — Irfan Pathan (@IrfanPathan) August 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: தயான்சந்த் பெயரில் புதிய விருதை அறிவித்திருக்கலாம் - முன்னாள் ஹாக்கி கேப்டன் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.