சித்தூர்(ஆந்திரப் பிரதேசம்): ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்திய 13 பேரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான 115 மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். சிறப்பு படையினரால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரகசியத் தகவலின் அடிப்படையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டதாகவும், அப்போது, இரண்டு கார்கள், ஒரு லாரி முழுவதும் செம்மரக்கட்டைகள் கடத்திவந்ததை கண்டுபிடித்ததாகவும், சிறப்பு தனிப்படையினர் இந்த நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். செம்மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பான விசாரணையை அம்மாநில காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புடைய செம்மரக் கட்டைகள் பறிமுதல்!