டெல்லி: வங்கிகளில் கடன் வட்டி விகிதம் தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (பிப்.8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரெப்போ வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் இதுவரை 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், தற்போது 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம் கடந்த 2022 மே மாதம் முதல் தற்போது வரை 6வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மே மாதம் முதல் 250 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. 6.50 சதவீதம் என்பது கரோனா காலத்திற்கு முந்தைய நிலை ஆகும்.
அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் மந்தமானதாக இருக்கும். ஆனால், அவை 4 சதவீதமாக இருக்கும். எனவே இருபுறமும் 2 சதவீதத்தை முறைப்படுத்துவதில் ரிசர்வ் வங்கி பங்காற்றும். அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும்.
தற்போதைய நிலையில் பணவீக்கமானது 6.5 சதவீதமாகவும், 2023 - 2024ஆம் நிதியாண்டில் 5.3 சதவீதமாகவும் அமையும். உலக நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலையை ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது” என்றார்.
இவ்வாறு ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பால் வீடு, வாகனம் உள்ளிட்டவற்றுக்கான கடன் வட்டி விகிதம் உயர உள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி 1 அன்று மத்திய நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் 2023 - 2024ஆம் நிதியாண்டில் 6 முதல் 6.8 சதவீதமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய வருமான வரி விதிப்பு பலன் தருமா?