போபால்: மத்தியப்பிரதேசத்தின் உப்பர் ஏரியின் கரையில் அமைந்துள்ள வான் விஹார் தேசிய மற்றும் வனவிலங்கு பூங்காவில் சில மர்ம நபர்கள் புலிகளின் மீது கற்களை வீசுவதாகக்கூறி, கேஜிஎஃப் படத்தில் இரண்டாம் பாகத்தில் நடித்த பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வான் விஹார் பூங்காவில், கூண்டுகளில் உள்ள புலிகள் மீது சுற்றுலாப் பயணிகள் கற்களை வீசுகின்றனர். அப்படிச் செய்யாதே என்று சொன்னால், நன்றாகச் சிரிப்பது, கூச்சலிடுவது, கூண்டை அசைப்பது மற்றும் மேலும் கற்களை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். புலிகளுக்கு பாதுகாப்பு இல்லை” எனக் கூறியிருந்தார்.
-
Van Vihar,Bhopal. Madhya Pradesh.Tourists ( ruffians ) pelting stones at the tiger in closures.Having a good laugh when told not to do so.Screaming laughing,shaking the cage- throwing https://t.co/XiI7SCu50Y security for the tiger.humiliation they are subjected to .@van_vihar pic.twitter.com/b3ouu4vhlA
— Raveena Tandon (@TandonRaveena) November 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Van Vihar,Bhopal. Madhya Pradesh.Tourists ( ruffians ) pelting stones at the tiger in closures.Having a good laugh when told not to do so.Screaming laughing,shaking the cage- throwing https://t.co/XiI7SCu50Y security for the tiger.humiliation they are subjected to .@van_vihar pic.twitter.com/b3ouu4vhlA
— Raveena Tandon (@TandonRaveena) November 21, 2022Van Vihar,Bhopal. Madhya Pradesh.Tourists ( ruffians ) pelting stones at the tiger in closures.Having a good laugh when told not to do so.Screaming laughing,shaking the cage- throwing https://t.co/XiI7SCu50Y security for the tiger.humiliation they are subjected to .@van_vihar pic.twitter.com/b3ouu4vhlA
— Raveena Tandon (@TandonRaveena) November 21, 2022
இதற்கு பதிலளித்த பூங்கா நிர்வாகம், சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.மேலும், ”வான் விஹார் தேசிய பூங்காவில், விலங்குகளுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலுக்கும் எதிராக ஜீரோ டாலரன்ஸ் கொள்கையை பின்பற்றுகிறது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
பூங்காவின் இயக்குநர் பத்மப்ரியா பாலகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், ”டாண்டன் பகிர்ந்த வீடியோவில் உண்மையில் யாரும் கற்களை எறிந்ததாகக் காட்டப்படவில்லை, ஆனால் யாரோ ஒருவர் பின்னால் இருந்து ஏன் கற்களை வீசுகிறீர்கள்? எனக் கேட்கிறார்கள். வீடியோவில் காணப்பட்ட இரண்டு ஆண்கள் தவறாக நடந்துகொண்டனர், சத்தமிடுகிறார்கள். நாங்கள் அவர்களின் படங்களை பூங்காவின் வாயில்களில் வைத்து, அவர்கள் நுழைவதைத் தடைசெய்துள்ளோம்.
இது மட்டுமின்றி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, கண்காணிப்பதில் கவனக்குறைவாக இருந்ததற்காக எங்கள் ஊழியர்களிடமிருந்தும் நாங்கள் விளக்கம் கேட்டுள்ளோம்" என்று கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பூங்கா முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: துப்பாக்கியுடன் போஸ் - திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் மகன் படம் வைரல்!