ETV Bharat / bharat

ராமோஜி பிலிம் சிட்டி: தெலங்கானா மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலத்துக்கான விருது - Telangana tourism destinations awards

ராமோஜி பிலிம் சிட்டிக்கு தெலங்கானா மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா நாளை மாலை 4 மணிக்கு பேகம்பட்டில் உள்ள ப்ளாசா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

Ramoji Film CIty
Ramoji Film CIty
author img

By

Published : Sep 26, 2021, 3:47 PM IST

Updated : Sep 26, 2021, 4:06 PM IST

ஹைதராபாத்: ராமோஜி பிலிம் சிட்டி தெலங்கானா மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ‘சுற்றுலாத் தலத்தின் சிறந்த குடிமை மேலாண்மை’ எனும் பிரிவின் கீழ் ராமோஜி பிலிம் சிட்டிக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது.

மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுட் நேற்று (செப்டம்பர் 25) சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் இடங்களுக்கு 16 பிரிவுகளின் கீழ் விருதுகளை அறிவித்தார். இதில் ராமோஜி பிலிம் சிட்டியும் இடம்பிடித்துள்ளது.

பைவ் ஸ்டார் ஹோட்டல் டீலக்ஸ் பிரிவில் வெஸ்டின் ஹோட்டலும், பைவ் ஸ்டார் ஹோட்டல் பிரிவில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலும் இடம்பிடித்துள்ளது. புறநகரில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கான பிரிவில் கோல்கண்டா ரிசார்ட்ஸுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

4 நட்சத்திர ஹோட்டல்களுக்கான பிரிவில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள தசபல்லா ஹோட்டலும், முருகவாணி ரிசார்ட்டும் இடம்பிடித்துள்ளன.

3 நட்சத்திர ஹோட்டல் பிரிவில் லக்டி-கா-புல்லில் உள்ள பெஸ்ட் வெஸ்டர்ன் அஷோகா ஹோட்டலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விழாக்கள் நடத்த சிறந்த இடமாக நோவாடெல், ஹெச்ஐசிசி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த பசுமை ஹோட்டல்களுக்கான பிரிவில், தாராமடி பாராடரி முதல் பரிசையும், முலுகு மாவட்டம் ராமப்பா கோயில் அருகே உள்ள ஹரிடா ஹோட்டல் இரண்டாம் பரிசையும், நிசாமாபாத் மாவட்டம் அலிசாகரில் உள்ள லேக் வியூவ் ரிசார்ட் மூன்றாம் பரிசையும் வென்றுள்ளன. நாளை (செப்டம்பர் 27) உலக சுற்றுலா தினத்தன்று இந்த விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இதையும் படிங்க: மாசடையும் காவிரி ஆறு - கண்டுகொள்ளாத அலுவலர்கள்

Last Updated : Sep 26, 2021, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.