ஹரித்வார்: ஹைதராபாத் நகரை 'பாக்யநகர்' என்று மறுபெயரிடுவதற்கான உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் முன்மொழிவை ஆதரித்த யோக் குரு பாபா ராம்தேவ், "ஹைதர் (அலி) க்கு ஹைதராபாத்துடன் எந்த தொடர்பும் இல்லை, எனவே அதன் பெயர் மாற்றப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து ஹரித்வாரில் யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில், “பாக்யநகர் ஒரு பண்டைய மற்றும் வரலாற்று பெயர். ஹைதராபாத் இஸ்லாமிய நகரத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதபோது நகரத்தின் பெயரை மாற்ற வேண்டும்.
மேலும், கடந்த காலங்களில் தவறுகள் நடந்தன, அவை திருத்தப்பட வேண்டும். முகலாயர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் எங்கள் நகரங்கள் மற்றும் ஆலயங்களின் பெயர்களை மாற்றியுள்ளனர். அதை நாங்கள் சரிசெய்ய வேண்டும்” என்றார்.
மேலும் கரோனா வைரஸிற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி உதவும். ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை காப்பாற்றுவது கடினம். மக்கள் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'இது ஓவைசியின் டிஸ்னிலேண்ட், ட்ரீம்லேண்ட் அல்ல'- தேஜஸ்வி சூர்யா