டெல்லி : மாநிலங்களவை திங்கள்கிழமை (மார்ச் 28) மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருள்களின் விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரைன் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்தார்.
ஆனால் இது குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க : எனக்கு எதிராக வெளிநாட்டு சதி.. கதறும் இம்ரான் கான்!!