இந்திய பாதுகாப்புத் துறை மேம்பாட்டு குறித்த புதிய உத்தரவு தொடர்பான செய்திக் குறிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்புத் துறையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 498.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். இந்த நிதியானது 300 சிறு, குறு தொழில் முனைவோர், ஸ்டார் அப் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும். இதன் மூலம் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான தற்சார்பு இந்தியா திட்டம் மேலும் வலுபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது உள்நாட்டு தளவாட உற்பத்தியை மேம்படுத்தவும், உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து தொழில்நுட்ப ரீதியாக அவற்றை நவீனமையமாக்கவும் பயன்படுத்தப்படும் எனவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா 2ஆம் அலை: 724 மருத்துவர்கள் உயிரிழப்பு