ETV Bharat / bharat

மே 3ஆம் தேதி வரை ராஜஸ்தானில் அலுவலகங்கள், சந்தைகள் மூடல் - கரோனா பரவல் கட்டுப்பாடு

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ராஜஸ்தான் மாநில அரசு இன்று (ஏப்.19) முதல் மே 3ஆம் தேதி வரை அலுவலகங்களையும் சந்தைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான்
ராஜஸ்தான்
author img

By

Published : Apr 19, 2021, 2:12 PM IST

இது குறித்து அம்மாநில உள்துறை செயலர் அபய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஜான் அனுஷஹான் பக்வாடா’ என்று அழைக்கப்படும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் கடைகளும் அலுவலகங்களும் மட்டுமே இந்த 15 நாள்கள் காலகட்டத்தில் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

  • பழங்கள், காய்கறிகளின் விற்பனை இரவு ஏழு மணி வரை அனுமதிக்கப்படும்.
  • ராஜஸ்தானுக்குள் நுழைவோர் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட ஆர்டி - பிசிஆர் நெகட்டிவ் அறிக்கையைக் காட்ட வேண்டும்.
  • அதிகாலை நான்கு மணி முதல் காலை எட்டு மணி வரை செய்தித்தாள்கள் விநியோகிக்க அனுமதி உண்டு.
  • முன்னதாக, ராஜஸ்தான் மாநில அரசு ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு வித்திருந்தது. மேலும், அனைத்து கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் ஏப்ரல் 30அம் தேதி வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • தனியார் விழாக்கள், திருமணங்கள் மற்றும் பிற சமூகக் கூட்டங்களில் பங்குபெறுவோரின் எண்ணிக்கை 50ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, இறுதிச் சடங்கில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், சினிமா அரங்குகள், மல்டிபிளெக்ஸ், கேளிக்கை பூங்காக்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ’ரெம்டிசிவிர் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது’ - அமித் ஷா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.