பார்மர் (ராஜஸ்தான்): இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி வழியாக ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற நபரை எல்லைப்பாதுப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர். இந்தத் தகவலை எல்லை உறவுகளுக்கான டி.ஐ.ஜி., வினித் குமார் உறுதிப்படுதியுள்ளார். எல்லைப்பகுதிக்குள் ஊடுருவிய நபர் என்ன காரணத்திற்காக, இந்திய பகுதிக்குள் நுழைந்தார், அவரது நோக்கம் என்ன என்பது குறித்து உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய எல்லை பகுதியில் ஊடுருவியவர், பாகிஸ்தானைச் சேர்ந்த மோஹித் நார்த் சுமர் கான் என்பது தெரிய வந்துள்ளது. இவர்,பாகிஸ்தானிலிருந்து முனாபாவ் பகுதியைக் கடக்கும் போது கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் தனது நாசகார திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எல்லைப் பாதுகாப்பு படை 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, எல்லைபகுதி வழியாக ஹெராயின் கடத்தி வந்த, கடத்தல்காரன் ஹலாலி என்பவரை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது ஊடுருவியுள்ள நபர் ஏன், என்ன நோக்கத்திற்காக எல்லையைக் கடந்தார் என, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் உளவுத்துறை நிறுவன அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காய்கறி வியாபாரியை காலால் உதைக்கும் காவல் ஆய்வாளர்: அதிர்ச்சி வீடியோ!