ETV Bharat / bharat

ஜம்மூ-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு- வங்கி மேலாளர் சுட்டுக் கொலை - ஜம்மூ காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு

ஜம்மூ-காஷ்மீரில் இரு தினங்களுக்கு முன் ஆசிரியை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 2) வங்கி மேலாளர் ஒருவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

ஜம்மூ-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு- வங்கி மேலாளர் சுட்டுக் கொலை

author img

By

Published : Jun 2, 2022, 12:58 PM IST

குல்கம் (ஜம்மூ-காஷ்மீர்): ஜம்மூ-காஷ்மீர் யூனியனில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 2) ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மாநிலம் முழுவதும் பொதுமக்கள், அண்டை மாநிலத்தவர்கள் என பலரும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை விஜய் குமார் சுட்டுக்கொல்லப்பட்ட அதே பகுதியில் ஓரிரு தினங்களுக்கு முன் ஆசிரியை ஒருவர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். மேலும் இந்தக் கொலை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முன்னதாக இறந்த ஆசிரியை பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அச்சமூகத்தினரிடையே பயத்தை உருவாக்கியுள்ளது. கொல்லப்பட்ட மேலாளர் விஜய் குமார் சமீபத்தில்தான் பாரத ஸ்டேட் வங்கியின் இணை நிறுவனமான எல்லாக்காய் தேஹாட்டி வங்கியின் உள்ளூர் கிளையில் அவர் பணியமர்த்தப்பட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீர்; இராணுவ வீரர்கள் மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.