டெல்லி : நரேந்திர மோடி அரசு கடந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி 151 நவீன பயணிகள் ரயில்களை அறிமுகமாக்கி அதில் தனியார் பங்களிப்பை கோரியிருந்தது.
இதற்கான ஏலம் நடைபெற்ற நிலையில், யாரும் பெரிய ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சென்னையில் 16 ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக ஏலம் நடைபெற்ற நிலையில் ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் முதல்கட்டமாக 29 ஜோடி ரயில்களை இயக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது தெரியவருகிறது.
முன்னதாக ஒன்றிய அரசு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 150 தனியார் பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே சுமார் 100 வழித்தடங்களைத் தேர்ந்தெடுத்தது. இதனை அப்போது அறிவித்திருந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக பணிகள் தடைப்பட்டன.
இந்த தனியார்மய பயணிகள் ரயிலின் திட்ட முதலீடு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி ஆகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசாங்கம், ரயில் மேம்பாட்டு ஆணையம் ஒன்றை உருவாக்கும். அதன்மூலம் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிகார் ரயில் நிலையத்திற்குள் புகுந்த நக்சல்கள்