ETV Bharat / bharat

Vande Bharat: வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் குறைப்பு? குறைவான பயணிகளின் வருகையால் முடிவா? - வந்தே பாரத் டிக்கெட் விலை

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில்களின் குறிப்பிட்ட சேவையில் குறைவான பயணிகளே வருவதால், ரயில் கட்டணங்களை குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vande Bharat: குறைவான பயணிகளின் வருகையால் வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் குறைப்பு?

author img

By

Published : Jul 6, 2023, 1:21 PM IST

டெல்லி: நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மின்சார மயமாக்கப்பட்ட ரயில்வே தடங்களில் இதுவரை 46 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்களினால், குறிப்பிட்ட வழித்தடத்தில் மேற்கொள்ளப்படும் பயண நேரம் மற்ற ரயில்களைக் காட்டிலும் குறைந்துள்ளது.

இந்த ரயில்களின் மூலம் அதிகமாக 10 மணி நேரமும், குறைந்தபட்சம் 3 மணி நேரமும் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலான வந்தே பாரத் ரயில்கள் முழுமையான பயணிகள் வருகை உடன் இயங்கி வருகிறது. இருப்பினும், சில வந்தே பாரத் ரயில்கள் குறைவான பயணிகள் உடன் இயங்கி வருகிறது என ஆதாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இந்தூர் - போபால், போபால் - ஜபல்பூர், நாக்பூர் - பிலாஸ்பூர் போன்ற சில வந்தே பாரத் ரயில்கள் குறைவான பயணிகள் உடன் இயக்கப்பட்டு வருவது தெரிய வந்து உள்ளது. குறிப்பாக ஜூன் மாத இறுதி வரையிலான காலத்தில், போபால் - இந்தூர் வந்தே பாரத் ரயில் சேவையில் 29 சதவீத அளவிலான பயணிகள் மட்டுமே சராசரியாக பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

அதேபோல், மறுமார்க்கமாக இந்தூர் - போபால் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையில் 21 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொண்டு உள்ளனர். மேலும், 3 மணி நேரம் பயண நேரம் கொண்ட இந்த வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க ஏசி வகுப்புக்கு 950 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு ஆயிரத்து 525 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எனவே, இந்த வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயிலின் பயணக் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இது தொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயணிகளின் வசதிக்கேற்ப வந்தே பாரத் ரயில்கள் இயங்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.

2 முதல் 5 மணி நேரம் மட்டுமே பயண நேரத்தைக் கொண்டுள்ள வந்தே பாரத் ரயில்களின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக நாங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். ஏனென்றால், இந்த ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதேநேரம், பெரும்பாலான வந்தே பாரத் ரயில்கள் 100 சதவீத பயணிகள் உடன் இயங்கிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த மே மாதம் நாக்பூர் - பிலாஸ்பூர் இடையே இயங்கி வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குறைந்த அளவிலான பயணிகள் வருகையால், தேஜஸ் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு உள்ளது. அதேபோல், போபால் - ஜபல்பூர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 32 சதவீத பயணிகள் உடனும், மறுமார்க்கத்தில் 36 சதவீத பயணிகள் உடன் இயங்குவதால், இந்த ரயில் சேவையின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால், தற்போது போபால் - ஜபல்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவைக்கு ஏசி வகுப்புக்கு ஆயிரத்து 55 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் வகுப்புக்கு ஆயிரத்து 880 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், மறுமார்க்கத்தில் பயணிப்பதற்கு 955 ரூபாய் ஏசி வகுப்பிற்கும், ஆயிரத்து 790 ரூபாய் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், அதிக பயணிகள் உடன் இயங்கும் வந்தே பாரத் ரயில்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது. இதன்படி,

  1. காசர்கோடு - திருவனந்தபுரம் - 183 சதவீதம்
  2. திருவனந்தபுரம் - காசர்கோடு - 176 சதவீதம்
  3. காந்திநகர் - மும்பை சென்ட்ரல் - 134 சதவீதம்
  4. மும்பை சென்ட்ரல் - காந்திநகர் - 129 சதவீதம்
  5. வாரணாசி - புதுடெல்லி - 128 சதவீதம்
  6. புதுடெல்லி - வாரணாசி - 124 சதவீதம்
  7. மும்பை - சோலாப்பூர் - 111 சதவீதம்
  8. டேராடூன் - அமிர்தசரஸ் - 105 சதவீதம்
  9. சோலாப்பூர் - மும்பை - 104 சதவீதம்

இதையும் படிங்க: நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - தென்னக ரயில்வே தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.