ETV Bharat / bharat

பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது: ராகுல் காந்தி

author img

By

Published : Jun 7, 2022, 7:22 PM IST

மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின் கூறுகையில், பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சண்டிகர் (பஞ்சாப்): பஞ்சாபி மொழிப் பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா கடந்த மே29ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சித்துவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் இச்சம்பவம் நடந்தது.

சித்து மூஸ்வாலா கொலைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், ராகுல் காந்தி இன்று (ஜூன் 7) சித்துவின் சொந்த ஊரான மான்சா மாவட்டத்தில் உள்ள மூசா கிராமத்திற்குச்சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த கொலைச் சம்பவத்தின்போது வெளிநாட்டிலிருந்த ராகுல் காந்தி இன்று நாடு திரும்பிய நிலையில், சித்துவின் குடும்பத்தினரை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் மற்றும் மூத்த தலைவர்கள் பர்தாப் சிங் பஜ்வா, ஓபி சோனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை இன்று சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் படும் துயரத்தை விவரிப்பது கடினம். அவர்களுக்கு நீதி பெற்று தருவது நமது கடமை. அதை நாம் செய்வோம். பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பஞ்சாப்பின் அமைதி குறித்து ஆம்ஆத்மி அரசு பொருட்படுத்தவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

  • कांग्रेस नेता सिद्धू मूसेवाला जी के माता-पिता जिस दुःख से गुज़र रहे हैं उसे बयान करना मुश्किल है। इन्हें इंसाफ दिलाना हमारा फ़र्ज़ है, और हम दिला कर रहेंगे।

    राज्य की कानून व्यवस्था पूरी तरह से भंग हो चुकी है। पंजाब में अमन और शांति बनाये रखना AAP सरकार के बस की बात नहीं है। pic.twitter.com/IGoU5ugzgZ

    — Rahul Gandhi (@RahulGandhi) June 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் சித்துவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தனர்.

இதையும் படிங்க: சித்து மூஸ்வாலா கொலை: ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்புடைய 2 நபர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.