ETV Bharat / bharat

சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை நாளை சந்திக்கும் ராகுல் காந்தி

author img

By

Published : Jun 6, 2022, 5:02 PM IST

பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை ராகுல் காந்தி நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Rahul Gandhi to meet Sidhu Moosewala family on June 7

டெல்லி: பஞ்சாப் பாப் பாடகர் சித்து மூஸ்வாலா மே 29ஆம் தேதி மான்சாவில் காரில் சென்றுகொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாப் அரசு குறைத்த 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்தது.

இவர் கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அண்மையில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் மான்சா தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். மூஸ்வாலா கொலைக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி நாளை (ஜூன் 7) பஞ்சாப் மாநிலம் மான்சாவில் உள்ள மூஸ்வாலாவின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவத்தின்போது ராகுல் வெளிநாட்டில் இருந்ததும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் மூஸ்வாலாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உண்மையான பிரச்னைகளை மறைக்க பாஜக வகுப்புவாத அரசியலைப்பயன்படுத்துகிறது: சரத் பவார் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.