டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து ராகுல் காந்தி தனது X பக்கத்தில், “இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகட் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் (WFI) புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தனது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளைப் பிரதமர் அலுவலகம் முன்பு வைக்க திட்டமிட்டு அதற்குக் காவல் துறையினர் அனுமதி அளிக்காத காரணத்தினால், சாலையின் நடுவில் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் மிகவும் வருத்தம் தரக்கூடியதாக உள்ளது.
-
देश की हर बेटी के लिये आत्मसम्मान पहले है, अन्य कोई भी पदक या सम्मान उसके बाद।
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
आज क्या एक ‘घोषित बाहुबली’ से मिलने वाले ‘राजनीतिक फायदे’ की कीमत इन बहादुर बेटियों के आंसुओं से अधिक हो गई?
प्रधानमंत्री राष्ट्र का अभिभावक होता है, उसकी ऐसी निष्ठुरता देख पीड़ा होती है। pic.twitter.com/XpoU6mY1w9
">देश की हर बेटी के लिये आत्मसम्मान पहले है, अन्य कोई भी पदक या सम्मान उसके बाद।
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2023
आज क्या एक ‘घोषित बाहुबली’ से मिलने वाले ‘राजनीतिक फायदे’ की कीमत इन बहादुर बेटियों के आंसुओं से अधिक हो गई?
प्रधानमंत्री राष्ट्र का अभिभावक होता है, उसकी ऐसी निष्ठुरता देख पीड़ा होती है। pic.twitter.com/XpoU6mY1w9देश की हर बेटी के लिये आत्मसम्मान पहले है, अन्य कोई भी पदक या सम्मान उसके बाद।
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2023
आज क्या एक ‘घोषित बाहुबली’ से मिलने वाले ‘राजनीतिक फायदे’ की कीमत इन बहादुर बेटियों के आंसुओं से अधिक हो गई?
प्रधानमंत्री राष्ट्र का अभिभावक होता है, उसकी ऐसी निष्ठुरता देख पीड़ा होती है। pic.twitter.com/XpoU6mY1w9
இந்த நாட்டின் ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை என்பது முக்கியம். பதக்கங்களும் பெருமைகள், அதன் பின்தான் இந்த துணிச்சலான வீரர்களின் கண்ணீரை விட, உங்களது பாகுபலியால் கிடைக்கும் அரசியல் ஆதாயம் முக்கியமானதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தியாவின் காப்பாளர் எனக் கூறும் பிரதமருக்கு இந்த கொடுமையில் பங்கு உள்ளது வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் விளையாட்டு வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வீராங்கனைகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. இதனையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டது. அதன் பின், சஞ்ஜய் சிங் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் நெருங்கிய நண்பரான சஞ்ஜய் சிங், புதிய இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு மீண்டும் எதிர்ப்பு உருவானது.
இதனைத் தொடர்ந்து,சஞ்ஜய் சிங் தலைமையிலான புதிய இந்திய மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. தலைமையைத் தேர்வு செய்வதில் முறையான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தற்போது இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்க 3 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சிக்கு வருகைதரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!