டெல்லி : மணிப்பூரின் குரலை பாஜக மற்றும் பிரதமர் கொலை செய்ததாக ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மக்களின் குரலாக இந்தியா காணப்படும் நிலையில், மணிப்பூரில் பாரத மாதாவை பாஜகவினர் கொன்றுவிட்டதாக தெரிவித்தார். உரையை தொடங்கும் போது தான் கூறியது போல் இந்தியா என்ற குரலை நீங்கள் கொன்றுவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். நீங்கள் பாரத மாதவின் பாதுகாவலர்கள் அல்ல என்றும் நீங்கள் தான் பாரத மாதாவை கொன்றவர்கள் என்றார்.
மரியாதையுடன் பேசும் போதும், நீங்கள் வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என்றும் மாறாக எனது தாயை கொன்று வருகிறீர்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். ராவணனுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானி ஆகிய இருவரின் பேச்சை கேட்டு பிரதமர் மோடி நடப்பதாக தெரிவித்தார்.
மேகநாத், கும்பகர்ணன் ஆகிய இருவரின் பேச்சை கேட்டு ராவணன் நடந்தான், அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷா மற்றும் கவுதம் அதானியின் பேச்சை மட்டும் கேட்டு நடப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். இலங்கையை எரித்தது ஹனுமன் இல்லை, ராவணனின் அகங்காரம். அதேபோல் நீங்க ஒட்டுமித்த நாட்டையும் எரிக்க முயற்சித்து வருவதாக ராகுல் கூறினார்.
முதலில் மணிப்பூரை எரித்ததாகவும், தொடர்ந்து அதே செயலை தற்போது அரியானாவிலும் மேற்கொண்டு வருவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். தான் மணிப்பூர் நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு உள்ள பெண்களிடம் பேசியதாகவும், அதில் இருந்து உங்களுக்கு இரண்டு உதாரணங்களை சொல்ல விரும்புவதாக கூறினார்.
ஒரு பெண் தனக்கு ஒரே ஒரு குழந்தை இருப்பதாகவும், தனது கண் முன்னே குழந்தை சுடப்பட்டதாக தெரிவித்ததாகவு மற்றொரு பெண் இரவு முழுவதும் தனது மகனின் சடலத்துடன் படுத்து இருந்ததாக தெரிவித்ததாகவும் ராகுல் காந்தி கூறினார். மற்றொரு முகாமில் இருந்த பெண்ணிடம் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்ட போது அவர், நடு நடுங்கியதாகவும், அவருக்கு நடந்தது கூறி முடியாமல் மயக்கம் அடைந்ததாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
பாஜகவினர் மணிப்பூரில் இந்துஸ்தானை கொன்றுவிட்டதாகவும், தான் பொய் கூறவில்லை நீங்களே கூறுங்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி உரையின் இடையே எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபடத் தொடங்கினர். ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
தனது பாரத் ஜோடோ யாத்ரா (இந்திய ஒற்றுமை பயணம்) குறித்து குறிப்பிட்ட ராகுல் காந்தி யாத்திரை இன்னும் நிறைவு பெறவில்லை என்றும், அதன் இரண்டாவது விரைவில் தொடங்கும் என்றும் அதற்காக தான் லடாக் கூட செல்வேன் என்றும் ராகுல் காந்தி கூறினார். கடைசியாக தான் பேசிய போது, கவுதம் அதானியின் மீது கவனம் செலுத்தியதாவும் அது பாஜக தலைவர்கள் பலரை தொந்தரவு செய்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 130 நாட்கள், இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு அனைவருடன் பயணித்ததாகவும் கடலில் இருந்து காஷ்மீர் வரை நடந்தே சென்ற அந்த யாத்திரை இன்னும் முடிவடையவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். யாத்திரையின் போது நிறைய பேர் தன்னிடம் உங்கள் இலக்கு என்ன என்று கேட்டதாகவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ஏன் செல்கிறீர்கள்? என்று வினவியதாக ராகுல் கூறினார்.
ஆனால் ஆரம்பத்தில் தன்னிடம் பதில் ஏதும் இல்லை என்றும் எதற்காக யாத்திரையை ஆரம்பித்தேன் என்று தனக்கு தெரியவில்லை என்றார். ஆனால் தான் யாத்திரையை ஆரம்பித்த போது மக்கள் மத்தியில் இருக்க விரும்பியதாகவும் அதற்காக சாக கூடத் தயார், எதற்காக் சிறை செல்லத் தயார், எதற்காக 10 வருடங்களாக முறைகேடுகளை மட்டும் கேட்டுக் கொண்டு இருந்தேன் என்ன விஷயம் நான் நெருக்கமாக இருந்த விஷயம் என தான் விரும்பியது அனைத்தையும் புரிந்து கொள்ள முடிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
முன்னதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார். மக்களவையில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி என ராகுல் காந்து தெரிவித்தார்.
இதையும் படிங்க : நம்பிக்கையில்லா தீர்மானம் 2வது நாள்: அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ராணி உரை!