ETV Bharat / bharat

பிகார் காங்கிரஸ் கூண்டோடு மாற்றம்?

பிகார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றியமைக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Jul 7, 2021, 12:37 PM IST

டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிகார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்.

பிகார் சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை.

இதைத்தொடர்ந்து,மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றியமைக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பிகார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான மீரா குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சமீர் குமார், ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் வருகிற புதன்கிழமை (ஜூலை 7) பிகார் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் எம்எல்சி.,கள் ஆகியோர் ராகுல் காந்தியை சந்திப்பார்கள் என்று கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.