கர்நாடகா(மந்தியா): ’பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பெயரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது கர்நாடகாவில் தனது யாத்திரையை நடத்தி வருகிறார்.
அதில் பங்கேற்ற கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான சித்தராமையா ராகுலுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினார். பிறகு சிறிது நேரம் கழித்து சித்தராமையாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார் ராகுல் காந்தி.
இது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: விரைவில் ஹைதராபாத்தில் தலித் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு