இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' இன்று (ஜன.14) ராகுல் காந்தி தொடங்கினார். இந்த யாத்திரை 67 நாட்களில் 100 நாடாளுமன்றத் தொகுதிகள், 110 மாவட்டங்கள் வழியாக 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிலோ மீட்டர் பயணம் செய்து மார்ச் 20ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முடிவடையவுள்ளது.
'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' தொடக்க நிகழ்வில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “2004ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். ஆனால் முதன் முறையாக இந்தியாவில் உள்கட்டமைப்புகள் சரிந்த இடத்திற்கு வந்துள்ளேன். 2023 ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிக்குப் பின்னர் மணிப்பூர் மாநிலம் பிளவுபட்டுள்ளது. இங்கு உள்ள மக்கள் பல்வேறு இழப்பினை சந்தித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தவர்களை இழந்துள்ளனர்.
-
न्याय की हुंकार के रूप में, देश भर में हो रहे भयंकर अन्याय के विरुद्ध, आज से भारत जोड़ो न्याय यात्रा की शुरुआत हो चुकी है।
— Rahul Gandhi (@RahulGandhi) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
हम जन की बात सुनने आ रहे हैं, मन की बात सुनाने नहीं।
हम जनता का दुख-दर्द समझने, उनसे संवाद करने आ रहे हैं।
और इसी ज़मीनी संवाद से निकलेगा शांतिपूर्ण,… pic.twitter.com/E6R7NZUz0N
">न्याय की हुंकार के रूप में, देश भर में हो रहे भयंकर अन्याय के विरुद्ध, आज से भारत जोड़ो न्याय यात्रा की शुरुआत हो चुकी है।
— Rahul Gandhi (@RahulGandhi) January 14, 2024
हम जन की बात सुनने आ रहे हैं, मन की बात सुनाने नहीं।
हम जनता का दुख-दर्द समझने, उनसे संवाद करने आ रहे हैं।
और इसी ज़मीनी संवाद से निकलेगा शांतिपूर्ण,… pic.twitter.com/E6R7NZUz0Nन्याय की हुंकार के रूप में, देश भर में हो रहे भयंकर अन्याय के विरुद्ध, आज से भारत जोड़ो न्याय यात्रा की शुरुआत हो चुकी है।
— Rahul Gandhi (@RahulGandhi) January 14, 2024
हम जन की बात सुनने आ रहे हैं, मन की बात सुनाने नहीं।
हम जनता का दुख-दर्द समझने, उनसे संवाद करने आ रहे हैं।
और इसी ज़मीनी संवाद से निकलेगा शांतिपूर्ण,… pic.twitter.com/E6R7NZUz0N
ஆனால், மணிப்பூர் மாநிலம் மக்களின் கண்ணீரைத் துடைக்க, கரங்களைப் பற்றி ஆறுதல் கூற பிரதமர் வரவில்லை. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று. பிரதமர் மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மணிப்பூர் மாநிலம் இந்தியாவில் இல்லை என நினைக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. மணிப்பூர் மாநிலம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் வெறுப்பின் சின்னம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மணிப்பூர் மாநில மக்கள் அனைத்தையும் இழந்து உள்ளீர்கள். நாங்கள் நீங்கள் இழந்ததை மீண்டும் உங்களுக்குத் திருப்பித் தருவோம். மக்களின் வலிகளை எங்களால் உணர முடிகிறது. மக்களின் காயங்கள், இழப்பு, துயரத்தை அறிவோம். மாநிலத்தின் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றைத் திருப்பித் தருவோம் என உறுதி அளிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூர் தலைநகர் இம்பாலின் இருந்து தொடங்க காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டிருந்தது. ஆனால் மாநிலத்தில் ஆளும் பிரேன் சிங் அரசு நிபந்தனைகள் விதித்தால் யாத்திரையின் தொடக்கம் தவ்பாலுக்கு மாற்றப்பட்டது. மேலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதில் யாத்திரை தொடக்க விழாவை ஒரு மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். விழாவில் 3 ஆயிரம் பேருக்கு அதிகமானவர்கள் கலந்து கொள்ளக்கூடாது. யாத்திரையில் தேசத்துக்கு விரோதமான, கலவரத்தைத் தூண்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. எல்.முருகன் இல்ல பொங்கல் விழாவில் தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!