ETV Bharat / bharat

மாட்டிறைச்சி வகைப்பாட்டை விளக்குக..! பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கேள்வி

பனாரஸ் இந்து பல்கலைக்கழக கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹாஸ்டல் மேனேஜ்மென்ட் தேர்வில் கேட்கப்பட்டிருந்த மாட்டிறைச்சி வகைப்பாடு குறித்த கேள்வி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கேள்வி

author img

By

Published : Oct 19, 2022, 7:51 PM IST

வாரணாசி: பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் கட்டண உயர்வுக்காக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் ஹாஸ்டல் மேனேஜ்மென்ட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு கேட்கப்பட்டிருந்த கேள்வி விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

உணவு செயல்பாடுகள் உற்பத்தி வகையின் கீழ் மூன்று சப்ஜெக்டிவ் வகை கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் ஏதேனும் இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு ‘மாட்டிறைச்சியின் வகைப்பாட்டை வரையறு' என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரும், IIMC இல் பத்திரிகைத் துறையின் இயக்குநருமான பேராசிரியர் ராகேஷ் உபாத்யாய் இந்த வினாத்தாளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு,“பனாரஸ் இந்து பல்கலைக்கழக, பயிற்றுனர்கள் மாட்டிறைச்சியின் வகைப்பாட்டை விவரிக்கும் போது அல்லது விளக்கும்போது அதிக அறிவைப் பெற்றிருந்தால் அவர்களது பெயரை வெளியிட வேண்டும்.

இதுபோன்ற கேள்விகளை வடிவமைத்த பயிற்றுனர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர் யார்? எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டது என அறிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்வி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்து தன் காதலனை தேடி முர்ஷிதாபாத் வந்த பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.