சண்டிகர்: கடந்த 2015ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் பாதல், முதலமைச்சராக இருந்தபோது குரு கிரந்த் சாகிப் என சீக்கிய மதகுருவை அவமதித்தாகக் கூறி பஞ்சாப் ஃபரீத்கோட் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின்போது, கோட்காபூரா, பெஹ்பல் கலான் ஆகிய இடங்களில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சுட்டில் இருவர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வழக்கில், முதலில் பஞ்சாப் காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று விசாரணை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து, ஐபிஎஸ் அலுவலர் குன்வர் விஜய் பிரதாப் சிங் தலைமையிலான இந்த சிறப்புக் குழுவின் விசாரணையை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரத்து செய்தது.
விசாரணை ரத்து
பின்னர், பஞ்சாப் காவல் துறைக் கூடுதல் தலைமை இயக்குநர் எல்.கே. யாதவ் தலைமையில் புதிய சிறப்பு விசாரணைக் குழுவை கடந்த மே 7ஆம் தேதி அமைத்தது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ஆறு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்தக் குழுவுக்கு உத்தரவிட்டது.
நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு நேற்றோடு நிறைவடைந்த நிலையில், கோட்காபூரா காவல் துறை துப்பாக்கிச்சுடுதல் வழக்கின் குற்றப்பத்திரிகை எங்கே என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆறு மாதங்களும் ஒரு நாளும்...
இதுதொடர்பாக இன்று (நவ. 8) செய்தியாளரைச் சந்தித்த சித்து,"கோட்காபூரா காவல் துறை துப்பாக்கிச்சுடுதல் வழக்கின் குற்றப்பத்திரிகையை ஆறு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்றுடன், ஆறு மாதங்கள் ஒரு நாள் ஆகிவிட்ட நிலையில், வழக்கில் குற்றப்பத்திரிகை எங்கே?. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் காவல் துறை இயக்குநர் சுமேத் சிங் சைனிக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக ஏன் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: LAKHIMPUR KHERI VIOLENCE: காவல் துறை விசாரணையில் அதிருப்தி - உச்ச நீதிமன்றம்