ETV Bharat / bharat

கேங்ஸ்டர் முக்தியார் அன்சாரி வழக்கு - பஞ்சாப் மாஜி முதலமைச்சருக்கு தற்போதைய CM எச்சரிக்கை!

கேங்ஸ்டர் அன்சாரியை சிறையில் அடைத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததற்கான 55 லட்சம் ரூபாய் பஞ்சாப் கருவூலத்தில் இருந்து செலுத்தப்போவதில்லை என்று தெரிவித்து உள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மாஜி முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் உள்ளிட்டோரை எச்சரித்து உள்ளார்.

punjab cm
கேங்ஸ்டர் முக்தியார் அன்சாரி வழக்கு - பஞ்சாப் மாஜி முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கிற்கு பகவந்த மான் எச்சரிக்கை!
author img

By

Published : Jul 2, 2023, 6:13 PM IST

சண்டிகர்: கேங்க்ஸ்டர் முக்தியார் அன்சாரி வழக்கில், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் சிறைத்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ஆகியோருக்கு, முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. அன்சாரியை பஞ்சாப் சிறையில் அடைத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அரசு கருவூலத்தில் இருந்து 55 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்திய விவகாரத்தில், இந்த அரசு கடுமையான முடிவை எடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இன்று (ஜூலை 02ஆம் தேதி) வெளியிட்டு உள்ள ட்வீட் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, 'அரசு கருவூலத்தில் இருந்து செலவழித்த பணத்தை மீட்டுத் தருமாறு முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் மற்றும் முன்னாள் சிறைத்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பணம் செலுத்தாத பட்சத்தில் இரு தலைவர்களின் ஓய்வூதியம் மற்றும் இதர அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும்’ என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

வாய்ச்சவடால் அரசு - பாரதிய ஜனதா கட்சி தாக்கு: முக்தார் அன்சாரி வழக்கு விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வெளியிட்ட அறிக்கை குறித்து, கருத்து தெரிவித்து உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ராஜ்குமார் வெர்கா கூறியதாவது, 'இந்த அரசு, வெறும் வாய்ச்சவடால் அரசாகவே உள்ளது. செயல்பாட்டில் ஒருபோதும் ஈடுபடுவது இல்லை.

இந்த வழக்கு விவகாரத்தில், அரசுப் பணம் செலவழிக்கப்பட்டு இருந்தால், அந்தப் பணத்தை, அதற்குக் காரணமான நபரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும். கடந்த காலங்களில், அரசு மேற்கொண்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. பஞ்சாப் அரசே பணத்தை வீணடிக்கும் செயல்களிலேயே, தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆம் ஆத்மி அரசிடம் மக்கள் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, அதனால்தான் இப்படியெல்லாம் நாடகம் ஆடுகிறது' என்று வெர்கா தெரிவித்து உள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரூப்நகர் சிறையில் ரவுடி முக்தார் அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், உத்தரப்பிரதேச காவல்துறை அவரை, தங்களது மாநில சிறையில் அடைக்க விரும்பியது. இதற்காக 25 நினைவூட்டல் கடிதங்களை, உத்தரப்பிரதேச காவல்துறை, பஞ்சாப் அரசுக்கு அனுப்பி இருந்தது. ஆனால், பஞ்சாப் அரசு, அன்சாரியை உத்தரப்பிரதேச காவல்துறையிடம் இறுதிவரை ஒப்படைக்கவில்லை. இதை எதிர்த்து உத்தரப்பிரதேச காவல்துறை உச்ச நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தக்காளி விக்கிற விலைக்கு என்னமா ஒரு சலுகை - உ.பி. வர்த்தகரின் புது யுக்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.