ETV Bharat / bharat

ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்தவருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் - மகாராஷ்டிரா

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்தவருக்கு புனே மாநகர காவல் துறை லுக்-அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்
author img

By

Published : Oct 14, 2021, 3:01 PM IST

புனே (மகாராஷ்டிரா): நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், மும்பை அருகே சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட போது போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்களால் அக்.3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

14 நாள் நீதிமன்ற காவலில் உள்ள ஆர்யன் கான் தரப்பில் பிணை கோரி மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர் குற்றச்சாட்டுகள்

ஆர்யன் கான் வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே குளறுபடிகள் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளருமான நவாப் மாலிக், இந்த கைது நடவடிக்கை போலியானது என்றார்.

மேலும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அலுவலர்களும், பாஜகவும் இணைந்து தீட்டிய சதித் திட்டம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

செல்ஃபி சர்ச்சை

மேலும், என்சிபியின் அலுவலகத்தில் கைதான ஆர்யன் கான் உடன் ஒருவர் எடுத்த செல்ஃபிதான், இந்த வழக்கில் உள்ள பல சர்ச்சைகளுள் ஒன்று. கிரண் கோஸாவி என்ற அந்த நபர் ஆர்யன் கான் உடன் எடுத்த செல்ஃபி, சமூக வலைதளங்களில் வைரலானது.

கோஸாவி எதற்கு என்சிபி அலுவலகத்தில் இருந்தார் என அமைச்சர் நவாப் மாலிக் கேள்வியெழுப்பியிருந்தார். கோஸ்சாவி என்சிபி அலுவலரோ அல்லது பணியாளரோ இல்லை என்றும், அக்டோபர் 2ஆம் தேதி என்சிபி நடத்திய சோதனையில் சாட்சியாக கப்பலில் இருந்தார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது புனே மாநகர காவல்துறை கரண் கோஸாவிக்கு லுக்-அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளது. கோஸாவி மீது கடந்த 2018ஆம் ஆண்டு, ஒருவருக்கு மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், கோஸாவி தேடப்படும் குற்றவாளியாக உள்ளதால், அவருக்கு தற்போது லுக்-அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு... தந்தைக்கு பறிபோன விளம்பர வாய்ப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.