ETV Bharat / bharat

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஏமாற்றியவர் கைது - பில்டர் பிரவீன் பாண்டிச்சேரி

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சரின் மருமகன் உள்பட 3 பேரிடம் 6.30 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஏமாற்றியவர் கைது

author img

By

Published : Dec 8, 2021, 4:56 PM IST

புதுச்சேரி: நடுத்தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் அலெக்சாண்டர். பில்டராக உள்ள பிரவீன், பாண்டிச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சரான பன்னீர் செல்வத்தின் மருமகன் ஆவார்.

இந்நிலையில் பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் கௌதம், கணேஷ்குமார் ஆகியோர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

அந்தப் புகாரில் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (34) என்பவர் தங்கம், வெள்ளி, கார், செல்போன் ஆகியவற்றை பில் இல்லாமல் விற்கக்கூடிய தொழில் செய்து வந்ததாகவும், தினேஷ் என்பவர் மூலமாக பாலாஜியுடன் தங்களுக்கு பழக்கம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பாலாஜியின் தந்தை துளசிதாஸ், ஐஏஎஸ் அலுவலராக பணியாற்றி வருவதாகவும், அவருக்கு சாஸ்திரி பவனில் சுங்கத்துறை அலுவலர்களிடம் நன்கு பழக்கம் இருப்பதால் விமான நிலையத்தில் பிடிபடும் தங்கத்தை தனக்கு குறைந்த விலைக்கு தருவதாகவும் பாலாஜி கூறியதை நம்பி முதலில் ஆறு லட்ச ரூபாய் கொடுத்து பாலாஜியிடம் தங்கம் வாங்கியதாக புகாரில் கூறியுள்ளனர்.

பின்னர், பல கோடி மதிப்பிலான தங்கம் இருப்பதாகவும், 6.50 கோடி ரூபாய் கொடுத்து தங்கத்தை வாங்கிக் கொள்ளுமாறும் தங்களிடம் பாலாஜி தெரிவித்ததால், உடனடியாக தங்களுக்குத் தெரிந்த 4 பேரிடம் இருந்து 6.30 கோடி ரூபாய் திரட்டி கடந்த செப்டம்பர் மாதம் பாண்டிச்சேரி மற்றும் பெரியமேட்டில் வைத்து பாலாஜியிடம் பணத்தை கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 2 மாதங்களாக பாலாஜி தங்கத்தை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் தங்களை ஏமாற்றி வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறும் தெரிவித்திருந்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அவரது தந்தை துளசி தாஸ், சூளைப் பகுதியைச் சேர்ந்த ஸ்டீல் கம்பெனி உரிமையாளர்களான மகேஷ் மற்றும் மாதவரம் பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் துளதிதாஸ் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்ததும், அவரை ஐ.ஏ.ஏஸ் அதிகாரி என பொய்யாகக் கூறி கோடிக் கணக்கில் 4 பேரும் இணைந்து மோசடியில் ஈடுபட்டதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பாலாஜி, துளசிதாஸ், மகேஷ் மற்றும் ஜெயகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: Viral Video: கத்தியுடன் கலாட்டா செய்த இளைஞர்கள் - விரட்டிப் பிடித்த காவலர்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.