ETV Bharat / bharat

புதுச்சேரியில் 3 ஆண்டுகளாக மோட்டார் சைக்கிள்களை திருடிய 5 பலே திருடர்கள் கைது.. 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.. - 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக 50 மோட்டார் சைக்கிள்களை திருடிய தமிழகத்தைச் சேர்ந்த பலே திருடர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 50 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

pud
pud
author img

By

Published : Aug 28, 2022, 9:16 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகரித்து வரும் வாகன திருட்டை தடுக்க, காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உருளையன்பேட்டை காவல் நிலைய சரக போலீசார், கடந்த 2ஆம் தேதி பண்ருட்டியைச் சேர்ந்த வல்லரசு, சுபாஷ் ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

வல்லரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கரி சஞ்சய் என்பவரை, போலீசார் கடந்த 19ஆம் தேதி கைது செய்து, மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.

இதில், கரி சஞ்சய் என்பவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி மற்றும் சரத் ஆகியோருக்கும் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 50 மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் திருடிய 50 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது... ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.