ETV Bharat / bharat

உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை... பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானை மயங்கி விழும் வீடியோவையும் பொதுமக்கள் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழந்தது

author img

By

Published : Nov 30, 2022, 9:23 AM IST

Updated : Nov 30, 2022, 9:00 PM IST

புதுச்சேரி: புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, காலை நடை பயிற்சிக்காக ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தது.

லட்சுமி 1995 ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமன் மூலம் இக்கோவிலுக்கு குட்டி யானையாக வழங்கப்பட்டு ஐந்து வயதில் கோயிலிக்காக வழங்கப்பட்டது. அன்று முதல் மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கி வந்தது.

இந்நிலையில் லட்சுமி இன்று அதிகாலை 6.30 மணி அளவில் நடைப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானை இறந்ததையடுத்து போலீசார் மற்றும் மணகுளவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் சம்பவம் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் யானைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றப்பட்டு கோயில் அருகில் வைக்கப்பட்டது.

லட்சுமி இருதய பாதிப்பால் இறந்திருக்கலாம் என பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகின்றனர். குருசுகுப்பம் அக்காசாமி மடத்தில் உள்ள இடத்தில் இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது என வருவாய் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். கோயில் அருகே வைக்கப்பட்டுள்ள யானையின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை... பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

இந்நிலையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் யானை உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் தான் மணக்குள விநாயகர் கோயில் சென்ற போது யானையிடம் ஆசிர்வாதம் வாங்கிய படங்களை பகிர்ந்து,”மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள்.எங்களை எப்படி தேற்றிக்கொள்வதே என்று தெரியவில்லை லட்சுமி யானையை இழந்து வாடும் புதுவை மக்களுக்கும்,வெளியூரிலிருந்து வந்து அன்போடு பழகியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

  • நம் புதுவையில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியாக வலம் வந்து ஆசிர்வாதம் மட்டுமல்ல ஆசையோடு பக்தர்களுடன் விளையாடிய லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன்.

    (File Video) pic.twitter.com/2kNO4UjBAv

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) November 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

32 வயதான லட்சுமி புதுச்சேரி மக்களிடம் அன்பாக பழகி வந்தது. இத்தனை ஆண்டுகளாக தங்களோடு பழகி வந்த யானை திடீரென பிரிந்ததை நினைத்து அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: மெஸ்ஸிக்காக அழுத சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்.. கத்தாருக்கு செல்ல தனியார் நிறுவனம் உதவி!

Last Updated : Nov 30, 2022, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.