ETV Bharat / bharat

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் ஏன் நடைபெறவில்லை? - அதிகாரப் பகிர்வால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை

புதுச்சேரியில் அதிகாரப் பகிர்வு காரணத்தால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பெருமாள் பேட்டி

author img

By

Published : Oct 7, 2021, 6:25 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஐந்து நகராட்சிகள் 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ் குமார் என்பவர் வார்டு ஒதுக்கீடு சரியாகச் செய்யப்படவில்லை எனக் கூறி உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள்

இதையடுத்து புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அடுத்த ஐந்து நாள்களுக்குள் வார்டு ஒதுக்கீடு சரிசெய்யப்பட்டு புதிய தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் நடைபெறுமா, நடைபெறாதா? என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

இது குறித்து புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் கூறுகையில், "புதுச்சேரியில் 1968ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் கடைசியாக நடைபெற்றது. அதன்பிறகு அதிகாரத்தில் இருந்தவர்கள் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வரவில்லை.

இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

அதன்பிறகு 2011ஆம் ஆண்டில் என்.ஆர். காங்கிரஸ் அரசு தேர்தல் நடத்த முன்வரவில்லை. அதன் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சியிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அதிகாரப் பகிர்வு காரணத்தால் அரசியல் கட்சியினருக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த விருப்பமில்லை" என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் டாடா குழும தலைவர் சந்திப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.