புதுச்சேரி: இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான சேவை நிறுவனங்களிடையே புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் ஹைதராபாத் - புதுச்சேரி - பெங்களூருக்கிடையே விமானப் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கிட ஸ்பைஸ் ஜெட் (SPICE JET) நிறுவனம் முன்வந்துள்ளது.
கரோனா பரவல் காரணத்தால் நிறுத்தப்பட்ட ஹைதராபாத் - புதுச்சேரிக்கு இடையேயான விமான சேவை விமானப் போக்குவரத்து சேவை 27.03.2022 இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட முதல் விமான சேவையில் பயணிகளோடு வருகை தந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு வரவேற்பு அளித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, பிற பயணிகளுக்கும் முதலமைச்சர் மலர்ச்செண்டு மற்றும் இனிப்புகள் வழங்கினார். விமானத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரியை பிற பெருநகரங்களுடன் வானூர்தி வழியாக இணைக்கும் இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் .செல்வம் சுற்றுலா அமைச்சர். லட்சுமி நாராயணன் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் AK. சாய், J. சரவணன்குமார், சுற்றுலாத்துறை செயலர் அருண்,ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகள் அனைத்தும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் புதுச்சேரி விமான நிலைய அலுவலர்கள் மூலம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : மீண்டு(ம்) மிரட்டும் ஜிகா.. விமான படை அலுவலர் பாதிப்பு!