புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். அதன்படி சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணத்தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள 3 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளது. இதற்காக முதல்கட்டமாக 156 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், போக்குவரத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000?