புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஆகஸ்ட் 10)ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2022-23ஆம் ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநில திட்டக்குழு இறுதி செய்த பட்ஜெட்டுக்கான கோப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் திடீரென அவசரமாக நேற்று அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத்தேர்தலை சந்தித்து ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக ரங்கசாமி டெல்லிக்குச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இன்று முகாமிட்டுள்ள முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து புதுச்சேரி நிலவரம் குறித்தும் சந்திப்பின்போது பேசியுள்ளார். மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து புதுச்சேரிக்கு கூடுதல் நிதி வழங்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்!