புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சித் தலைவர் வி.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதிதாக புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டுமே தவிர, கடுமையான இந்த நேரத்தில் சில குறைகளை தேடிக் கண்டுபிடித்து மலிவான அரசியல் செய்யக்கூடாது.
இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி சட்டப்பேரவை உறுப்பினர் நேரு, கரானா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்கு, மருத்துவ அலுவலர்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் சென்று, மருத்துவர்களையும், அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களையும் சுய விளம்பரத்திற்காக குறை கூறியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அவருடைய இந்தச் செயல் மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களையும் இதேபோன்று செயல்பட முன்னுதாரணமாக அமையும் என்பது வருந்தத்தக்கது. மருத்துவமனைக்கு சென்ற நேரு அவருக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் கரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா?
அனைத்து மருத்துவமனைகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு, தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே தனிமைப்படுத்தப்பட்டு தனிமையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில், காவலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனது தொகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துமாறு உதயநிதி வேண்டுகோள்!