ETV Bharat / bharat

புதிய சட்டப்பேரவை வளாகம்: ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டு விழா! - pudhucherry new assembly building

புதுச்சேரி: புதிய சட்டப்பேரவை வளாகத்திற்கு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு பின்னர் உள்துறை அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருப்பதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

pudhucherry new assembly building foundation stone laying ceremony

author img

By

Published : Jul 6, 2021, 12:57 AM IST

புதுச்சேரி சட்டப்பேரவைக் கட்டடம் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு, தற்போது வரை இயங்கி வருகிறது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இக்கட்டத்தில், சட்டப்பேரவை அரங்கம், முதலமைச்சர், அமைச்சர்கள் அறை மட்டுமே உள்ளன. பேரவை ஓரிடத்திலும், தலைமைச் செயலகம் வேறு இடத்திலும் இயங்கி வந்ததால் நிர்வாக ரீதியாக சில தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், புதிய சட்டப்பேரவை கட்டும் பணி ரூ. 220 கோடியில் தட்டாஞ்சாவடியில் தொடங்கப்படவுள்ளதாக சபாநாயகர் செல்வம் ஜூன் 22ஆம் தேதியன்று தெரிவித்தார்.

தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு இடத்தில் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவது தொடர்பாக சபாநாயகர் தலைமையில் இன்று (ஜூலை.5) மாலை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் முன்னிலை வகித்தனர். துறை செயலாளர்கள், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய சட்டப்பேரவை வளாகம், கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சபாநாயகர் அரசு செயலர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும், புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ள இடத்தில், தற்போது இயங்கி வரும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு மாற்று ஒதுக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் செல்வம், 'புதிய சட்டப்பேரவை அலுவலகம் கட்டுவதற்கு, ஒன்றிய அரசிடம் 360 கோடி ரூபாய் நிதி கோரியிருந்தோம். அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சட்டப்பேரவை அலுவலக கட்டடத்தை புதுச்சேரி தட்டாஞ்சாவடி வணிக வளாகப்பகுதியில் உள்ள 15 ஏக்கர் இடத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டு விழா

இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை பெறுவதற்கு, அடுத்த வாரம் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் டெல்லி செல்கிறோம். மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி ஒப்புதல் பெற்று வர உள்ளோம்.

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு மேல் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக ஆயத்தப்பணி மேற்கொள்ள கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சட்டப்பேரவை வளாகம் சுமார் 16 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும், தலைமைச் செயலகமும் அந்த வளாகத்தில் அமையும்' என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.