ETV Bharat / bharat

புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு - University of Pondicherry

புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை, பல்கலைக்கழக தேர்வுகள் கட்டுப்பாடு பிரிவு வெளியிட்டுள்ளது.

Publish the revised examination schedule of the University of Pondicherry

author img

By

Published : Jul 4, 2021, 7:00 PM IST

புதுச்சேரி : நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு முதல் முழுமையாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான தேர்வுகளை ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியில் இருந்து மே மாதம் 4ஆம் தேதிவரை நடத்த திட்டமிட்டிருந்தது,

இந்நிலையில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததால் இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது புதுச்சேரியில் கரோனாவின் தாக்கம் குறைவதால், தேர்வுகளை நடத்த புதுச்சேரி ஒன்றிய பல்கலைக்கழகம் முடிவு செய்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில், அனைத்து கலை-அறிவியல் கல்லூரிகளும் ஏப்ரலில் நடத்த இருந்த தேர்வை ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 17ஆம் தேதிவரை நடத்த புதுவை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.