காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வாக்குறுதி (Pratigya Yatras) யாத்திரையை பாரபங்கி என்ற இடத்தில் சனிக்கிழமை (அக்.23) தொடங்கினார். இன்று தொடங்கும் இந்த வாக்குறுதி யாத்திரை நவம்பர் 1ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த யாத்திரையை தொடங்கிவைத்து, பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா, வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏழு வாக்குறுதிகளை தருவதாகக் கூறினார். அதில், விவசாயக் கடன் தள்ளுபடி, 20 லட்சம் அரசு வேலை, பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன், கரோனா பாதிப்புக்குள்ளான குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தேர்தலில் பெண்களுக்கு 40 விழுக்காடு இடங்களில் போட்டியிட வாய்ப்பு, கரோனா கால மின் கட்டண நிலுவைத் தொகை தள்ளுபடி, அரசி-கோதுமை ரூ.2,500, கரும்பு ரூ. 4,000 என்ற தொகையில் கொள்முதல் செய்யப்படும் என ஏழு வாக்குறுதிகளை தந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது, முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பில் உள்ளார். அங்கு, கடந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் இம்முறை தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'HBD மோட்டா பாய்' - அமித்ஷாவை கிண்டல் செய்த எம்எல்ஏ!